பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 14 FEB 1984
மறைவு 06 MAR 2019
திரு பொன்னுசாமி விமல்காந் (விமல்)
வயது 35
பொன்னுசாமி விமல்காந் 1984 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுசாமி விமல்காந் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னுசாமி(பிரான்ஸ்) அம்பிகாபதி தம்பதிகளின் அன்பு மகனும், யோசப் சகாநாயகம் இலங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனோயா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

அநேகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கமலினி, நினி(சுகயினி- பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநாந்திரம்(ஆனந்தகுட்டி), திருநிறைச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷ்சியந்தினி, ஜனனி, கிங்ஸ்டன் ஆகியோரின் ஆசை அத்தானும்,

தினேஷ், கிறிசோந்திகா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜின்சன், கஜன், தனுஷன், திவானி, தஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

டிலான் அவர்களின் சிறியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கிருந்தோ வந்தோம்
எதிர்பாராமல் சந்தித்தோம்
அன்போடும் பாசத்தோடும்
அன்பு நண்பர்களானோம்
நண்பனாக அல்ல அண்ணா
நல்லுறவாகவே உறவாடினோம்
நடுவில் நம்மை பிரிந்து செல்ல
நண்பா நீ முடிவெடுத்ததென்ன?
இரக்கமில்லா அரக்கர்களது
ஈனமற்ற செயலால் தான் சென்றாயோ?
பத்து நாள் பச்சிளம் குழந்தை, மனையாளை
பதற வைத்து சென்றாயோ நண்பா!
எங்கு காண்போம் இனி
எப்போ சந்திப்போம்...
என்றும் நீங்கா நினைவுடன் அன்புத் தோழர்கள்.

தகவல்: குடும்பத்தினர், நண்பர்கள்

தொடர்புகளுக்கு

நண்பர்
நண்பர்
நண்பர்