மரண அறிவித்தல்
பிறப்பு 24 SEP 1942
இறப்பு 02 APR 2020
திருமதி கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா)
வயது 77
கமலாதேவி குலவீரசிங்கம் 1942 - 2020 சுன்னாகம் இலங்கை
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி குலவீரசிங்கம் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசம் சின்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான தில்லையர்(பிரபல சட்டத்தரணி) நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலவீரசிங்கம்(கிறிக்கட் அங்கிள்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தி அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீஞானயோகன் அவர்களின் அன்பு மாமியாரும்,

லிதூஷனன், வஸ்னி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி- செந்தில்நாதன்(ஐக்கிய அமெரிக்கா) மற்றும் பத்மாவதி- சச்சிதானந்தன்(அவுஸ்திரேலியா), வருணகுலசிங்கம்- விமலாதேவி(நியூசிலாந்து), ஜெயவீரசிங்கம்- டொரத்தி(பிரித்தானியா), தருமகுலசிங்கம்- மைதிலி(பிரித்தானியா), சரஸ்வதி- காலஞ்சென்ற சண்முகலிங்கம்(பிரித்தானியா), சரோஜினிதேவி- யோகநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவிதா- உதயகுமார்(ஜேர்மனி), கவிச்சந்திரன்- சந்திரபாமா(இலங்கை), கவியரசி- ஞானேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Respecting current regulations, a private funeral with family members take place on the 8th of April. A memorial service will be held for all friends and relatives at a later date.​

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆனந்தி - மகள்
ஸ்ரீஞானயோகன் - மருமகன்
கவிச்சந்திரன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles