1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 OCT 1930
இறப்பு 15 JAN 2019
அமரர் சரஸ்வதி சதானந்தன்
இளைப்பாறிய வைத்திய தாதி, அநுராதபுரம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மாலைதீவு
இறந்த வயது 88
சரஸ்வதி சதானந்தன் 1930 - 2019 மல்லாகம் இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 03.02.2020

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி சதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

கண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது !
சிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது !
எண்ணங்களில் உன் நினைவு இறுக்கமாக அணைக்கிறது!

எம் அருகில்  நீங்கள் இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உங்களை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்

ஓராண்டு கடந்தும் ஒரு நிலைக்கு வராமல்
மன்றாடி நிற்கும் மகத்தான பிள்ளைகளோடு
மனங்குலைந்து தடுமாறும் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles