Born 28 APR 1939
Died 12 AUG 2019
Mr Kanapathipillai Suntharalingam
இளைப்பாறிய அதிபர், சமாதான நீதவான்
Age 80
Kanapathipillai Suntharalingam 1939 - 2019 Chavakachcheri Sri Lanka

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய  இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட சாவகச்சேரியில் 28/APR/1939 இல் திரு.திருமதி கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சுந்தரலிங்கம் அவர்கள்   இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அன்னலக்சுமி, பாக்கியலீலா, பெரியதம்பி, குணராசா, விஜயராசா என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி இராசதுரை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகள் மகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நகுலேஸ்வரன்,சுதர்சினி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மஞ்சு, சிவகுமார் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பிரபாங்கன், பிரியங்கா, பவித்திரா, பிருந்தா, பைரவி, நர்த்தனன், ஜனதன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                               

மேலும் நன்கு கல்வி கற்று ஆசியராக கடமையாற்றியதுடன்,அதிபராகவும் நற் சேவையாற்றி ஓய்வு பெற்ற இவர் சமாதான நீதவானாகவும் சேவை ஆற்றினார் ஆத்துடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.08.2019 இல் 80 வயதில்  கொக்குவிலில் உள்ள  தாவடியில்  இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

”ஆசானே எங்கள்   அறிவு ஞானியே
பாசாங்கு இன்றி   கடமை ஆற்றி
நாசமாய் போவோரை  நற்பாதை காட்டிய
வேசம் போடாத   வெள்ளை மனமே
வாசம் வீசி    வசந்தம் பரப்பிய
ஆசை உறவே   அகிலம் துறந்தீரே”