மரண அறிவித்தல்
தோற்றம் 18 JUN 1976
மறைவு 03 MAY 2019
திரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)
வணிக சிறப்பு பட்டதாரி- யாழ் பல்கலைக்கழகம்
வயது 42
கனகரட்ணம் கனகச்சந்திரன் 1976 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 24 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மன்னார் அடம்பன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கனகச்சந்திரன் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா  தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகம், கற்பகவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கனகரட்ணம் இராஜேஸ்வரி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,

கண்ணன்(ஜேர்மனி), கீதா(லண்டன்), தீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுசிதரன்(லண்டன்), சந்திரசோபா(ஜேர்மனி), செந்தில்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனீர்த்தி, அர்த்தீஸ், அகர்விஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஆருத்திரா, அகரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சந்திரா, அருந்ததி, செல்வதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,

சிவா, தயா, சுதா, றஜி ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிஷாந்தன், மேகனாத், தனுஷிகா, துஷ்யந்தி, யுதர்ஷன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மாதங்கி, மயூதா, மயூதன், தயலக்‌ஷன், சஷ்மிதா, சாரு, சிந்து, சரண், பிரியந், விது, தர்ஷனா, யுதர்ஷனா, விதுஷனா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எங்கள் வீட்டுச் செல்வமே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
அம்மாவின் உயிர்மூச்சே நீ தானே
ஏன் மறந்து சென்றாய் எம் அம்மாவை
அண்ணனுக்கு அன்புத் தம்பியாய் நீ வளர்ந்தாயே
உயிரான உன் அன்புத் தங்கைகளை ஏன் அண்ணா
நீ விட்டுச்சென்றாய்

எங்கள் குடும்பத்தின் அறிவுக் களஞ்சியமே
அழகான உன் உருவம் கண்முன்னே நிக்குதண்ணா!
விதி செய்த செயலால் வெளிநாடு நாம் வந்து
எம்மை தவிக்க விட்டுச் சென்றாயே!

உன்னை நினைக்கையில்
உள்ளம் எல்லாம் நோகுதண்ணா!
என்ன பிழை செய்தோம் நாம் எல்லாம்
ஏன் அண்ணா எம்மை விட்டுச் சென்று விட்டாய்
மாமா சித்தா என்று உனை அழைக்கும்
உன் உயிர்களை ஏன் விட்டுச் சென்றாய்

அண்ணா நம் அம்மாவை ஒருகணம் நினைத்தாயா?!
இலங்கையில் துடிக்கின்றார்கள் உன் உறவுகள்
கனடாவில் கலங்குகிறார்கள் உன் உயிரான உள்ளங்கள்
எங்கள் தங்கமே மனசு துடிக்குதண்ணா
எம்மை விட்டு நீ செல்லவில்லை
எம்முள்ளே நீ அண்ணா உன் உள்ளே நாங்கள் அண்ணா!!!

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கண்ணன் - சகோதரர்
சுசிதரன் - மைத்துனர்
நாதன் - மைத்துனர்
கீதா - சகோதரி
நகுலன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,நெல்வயல்கள்,... Read More

Photos

View Similar profiles