15ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்மகிழ 02 JUN 1953
கண்நெகிழ 10 APR 2005
அமரர் சங்கரப்பிள்ளை வரதராசா (வள்ளல் வரதன்)
நகரசபை சாவகச்சேரி
இறந்த வயது 51
சங்கரப்பிள்ளை வரதராசா 1953 - 2005 கைதடி கிழக்கு இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: பூர்வபக்க துதியை- 26-03-2020

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை வரதராசா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

“அப்பா என்றழைக்க
உள்ளம் துடிக்குதப்பா”

நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்கு முன்பே
நிர்மூலமான தென்ன?

எல்லா நினைவுகளும் நீங்களாகி
உங்கள் உயிர் உள்ளவரை வாழ்ந்தோம்
இப்போ ஆறாத ரணங்களுடன் ஆயிரம்
இரவுகள் அமுதாலும் பிரிவின் துயர் குறையவில்லை
உம் அன்பு முகம் மறக்க முடியவில்லை!
அப்பா

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா

மறைந்தது வெள்ளி அல்ல
இன்னொன்று வாங்கி ஈடுசெய்ய
தங்கம் தொலைந்தால் பதில் ஒன்று வாங்கி விடலாம்
வைரம் மறைந்தால் வைடூரியத்தை தேடி விடலாம்

பவளம் தொலைந்தால் முத்துக்
குளித்து விடலாம்
மாறீடு செய்ய முடியாத மாசற்ற எம் செல்வமே!

மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

என்றும் வானளவும் மறவாத
நினைவுகளுடன் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles