1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 AUG 1981
மறைவு 15 AUG 2019
அமரர் சத்தியவதனி சுதாகரன்
இறந்த வயது 37
சத்தியவதனி சுதாகரன் 1981 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சத்தியவதனி சுதாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் உள்ளக் கோயிலே
குடியிருந்த நாம் தவிக்கிறோம் குதூகலிக்க நீயின்றி
வதனி இல்லாத எங்கள் இல்லம் வெறுமையாய் கிடக்கிறது!
கற்றுத் தந்தவளும் நீ
பற்று வைத்தவளும் நீ
இனிய சுற்றங்களை எமதாக்கியவளும் நீ
இற்றுவிடா இனிய வாழ்வை எமக்காக்கி
அதில் நீ அற்றுப்போனதேனம்மா?
உன் ஞாபகத்தில் என்றும் நாம் வெதும்பி வெதும்பி அழுகின்றோம்!
எம் குடும்பத்தின் ஒளி விளக்காய் திகழ்ந்த நீங்கள்
மறைந்து ஓராண்டு ஆனாலும்
உங்கள் ஒளி முகத்தை முன்நிறுத்தி
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழ்கின்றோம் நாம்!
நினைவில் எம்முடனும்
நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் இறைவனை பிரார்த்திப்போம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles