மரண அறிவித்தல்
பிறப்பு 30 APR 1946
இறப்பு 17 OCT 2020
திருமதி தேவநாயகம் ஜோசபின் (தவம்)
வயது 74
தேவநாயகம் ஜோசபின் 1946 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்ட தேவநாயகம் ஜோசபின் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை, மேரிதிரேசா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சவரிமுத்து போல் சிசிலியா போல் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

போல் தேவநாயகம்(ஓய்வுநிலை பொறியியலாளர் கல்வித் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபத்திரா(சுபா- பிரித்தானியா), அருண்ஜோசப்(பிரித்தானியா), ஹேமன் ராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

செல்வராணி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,

பிரான்சிஸ் சந்திரா, இம்மானுவேல் ஆனந்தம்(பிரித்தானியா), எமிலியானுஸ்பிள்ளை, மேரி பூமணி, பெனிக்னாநவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜித்தா(பிரித்தானியா), சசிரேகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பற்றிமா, கமலா, ஜெயவதி, அன்ரன் மரியதாஸ், மேரி ஜோசப், காலஞ்சென்றவர்களான புஸ்பம் மகேஸ்வரி, அருட்சகோதரி பிறிசில்லா(தி.கு.க. மடம்), வினிபிறட், றெஜீனா மற்றும் போல் அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நேத்தன், ஜொஹானன், அபிகேயில், ஜோஹாஸ், றித்திக், அலக்‌ஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருப்பலி 19-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித கொஞ்சேஞ்சி மாதா ஆலயத்தில் நடைபெற்று பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா(பெரிய கோயில்) சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

போல் தேவநாயகம் - கணவர்
எமிலியானுஸ்பிள்ளை - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles