Born 10 FEB 1966
Rest 28 NOV 2019
Late Sumathi Rajaharan
முன்னாள் ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி
Age 53
Sumathi Rajaharan 1966 - 2019 Alvay Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களையும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,நீண்டு வளர்ந்த பனை மரங்களையும், மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய் வடக்கில்  10/FEB/1966 ஆம் ஆண்டில் திரு திருமதி பொன்னையா செல்வராஜா, ஸ்ரீபவாதேவி தம்பதிகளின் அன்பு மகளாக சுமதி அவர்கள் அழகுக் குழந்தையாக  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                           

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்து இவர் சூரியகுமார், ஸ்ரீகுமார், சதாம்பிகை, செல்வஜோதி, அனி போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பெரியவளாகியதும்,திரு திருமதி சின்னத்தம்பி துரைசிங்கம், அருளம்மா தம்பதிகளின் மகனான இராஜகரன்(ராயூ) எனும் வீரம் நிறைந்த ஆண் மகனைத் திருமணம் முடித்து  சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயனத்தில் வம்ச விருத்தியாக துளசி, அபிராமி, வரூன்  எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                 

மேலும் நன்கு படித்த இவர் வட இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் கனிவான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்,                                                            இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 28.11.2019 இல் 53 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.  

அல்வாய் மண்ணின் அன்பு உள்ளமே
செவ்வாய் மகளே செந்தமிழ் உயிரே
நல்லாய் பேசி நன்மைகள் புரிந்து
கண்ணாய் எம்மை கவனித்த உறவே
மண்ணாய் போன மகத்தான மனைவியே
என்னாலும் நினைவில் நித்தம் தொடருவோம்