பிரசுரிப்பு Contact Publisher
30ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 MAY 1944
இறப்பு 04 DEC 1988
அமரர் நாகமுத்து கருணானந்தசிவம் நாட்டுப்பற்றாளர்
நாகமுத்து கருணானந்தசிவம் 1944 - 1988 காங்கேசன்துறை இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து கருணானந்தசிவம் அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.

காங்கேசன்துறை மண் தந்த..
கணக்கற்ற வரலாறுகளில்...
கருணானந்த சிவம் என்ற..
உங்கள் பெயர் கூட என்றும் நிலைத்திருக்கும்..


தமிழை நேசித்தீர்கள்..
தமிழ் மண்ணைப் பூசித்தீர்கள்..
உங்கள் உதடுகள்-
உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் ..
உண்மையான தமிழனின்..
உதிரம் ஓடியது கண்டோம்..!
உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்ற போதும்..
உறுதி குலையாது நிமிர்ந்தே நின்றீர்கள்..!


எத்தனை மேடைகள் உங்களைத் தாங்கின..!
எத்தனை வீச்சுகள் உங்களைத் தாக்கின..!
அத்தனையும் ஒரு பொருட்டாய் இருந்ததில்லை..
அனல் போல் சுமந்த உங்கள் இலட்சியத்தின் முன்னால்..!
அன்னைத் தமிழை அழகாய்ப் பேசினீர்கள்..!
அடுக்கு மொழியில் எழுதிக் குவித்தீர்கள்...
அகங்காரம் என்பதே தெரியாதிருந்தீர்கள்..
அமைதியும் அன்பும் ஒருங்கே கொண்டிருந்தீர்கள்..!


சொல்லக் கூடாத செய்தியைச் சொன்னான் காலன்..
வெல்ல முடியாத வீரத் தமிழன் இவனை..
வெள்ளத்தில் முளைத்த காளான்கள்-இரத்த வெள்ளத்தில்
போட்டுப் போனதாய்ச் சொன்னார்கள்..!
உள்ளத்தில் தங்கிய உங்களை- கால
வெள்ளம் என்ன கரைத்திடவா முடியும்..???

முப்பது ஆண்டுகள் முடிந்தால் என்ன...
இப்புவி உள்ள காலம் வரையில்..
நீங்கள் கல்விக்கண் திறந்த எங்கள் நெஞ்சங்களில்..
நீங்காமல் என்றும் நிறைந்திருப்பீர்கள்..!
எங்கள் தேசச் சரித்திரத்தின் ஒரு பக்கம்..
உங்கள் புகழ் சொல்லி நிமிர்ந்து நிற்கும்..!


இறை பாதத்தில் மாவீரர் தம்மோடு இப்போதைக்கு...
இளைப்பாறிடுங்கள் எங்கள் குருவே..!!!
என்றும் உங்கள் பாதையில் பயணிக்கும் நடேஸ்வராக் கல்லூரி மாணவர்கள் O/L1987 A/L1990.

தகவல்: ராஜகரன்(தலைவர்)

தொடர்புகளுக்கு

ஸ்ரீதரன்
ராஜகரன்(தலைவர்)

கண்ணீர் அஞ்சலிகள்