நன்றி நவிலல்
திரு விஷ்வலிங்கம் சபாரத்தினம் பிறப்பு : 20 NOV 1950 - இறப்பு : 26 JAN 2021 (வயது 70)
விஷ்வலிங்கம் சபாரத்தினம் 1950 - 2021 அனலைதீவு 4ம் வட்டாரம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இல.175 பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஷ்வலிங்கம் சபாரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் கண்ணோடு இருந்தவர் மண்ணாகிப்போன வேளையில்
செய்வதறியாது நாம் துயரத்தில் நின்ற போது
தூரமிருந்தாலும் நேரத்தோடு துக்கம் விசாரித்து,
அன்போடு ஆறுதல் சொல்லி,

அனுதாபம் எனும் பரிவை காட்டி,

உடன் இல்லாவிட்டாலும்,
உணர்வுப்பூர்வமான வார்த்தைகளை உதிர்த்து,

உடனிருந்து உணர்வை தந்த நல் உள்ளங்களுக்கு

உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

26-01-2021 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்த எமது குடும்பத் தலைவன் அமரர் விசுவலிங்கம் சபாரெத்தினம் அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அனலைதீவு வடலூர் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிரியைகள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும். அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.