Born 22 JUN 1927
Died 04 JUN 2019
Mrs Somasundaram Saraswathy
Age 91
Somasundaram Saraswathy 1927 - 2019 Kokkuvil West Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நெல்வயல்கள்,புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கொக்குவில் மேற்கில் 22/JUN/1927 ஆம் ஆண்டில் வல்லிபுரம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளாக சரஸ்வதி  அவர்கள் சிவசுப்பிரமணியம் எனும் சகோதரருடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து  வளர்ந்து  பெரியவளானதும் இராமலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான சோமசுந்தரம்(RMP) என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து ஸ்ரீபதி, ஸ்ரீரங்கன், ஸ்ரீகாந்தன், இந்துமதி போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் அங்கயற்கண்ணி, கிருஷ்ணபிள்ளை போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மயூரன்-சோபி, மகிந்தன்-நிருஜா, அபிராமி,மதுரா-கூஷணன், தீபன்-ஜஸ்மினா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அஷ்வின், லக்‌ஷ்மன், மேஹா, மாயா, அருண், மீரா போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். 

மேலும்  இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும்,  குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு  பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்  என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 04.06.2019 இல் 91 வயதில் பிரான்ஸில் உள்ள Saint mard நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"கொக்குவில் தந்த   
.......கோ மகளே
பக்கம் இருந்த  
.......பாச உறவே
நித்தம் கவலை போக்கி   
....... நிம்மதி தந்த
எங்கள் உறவே  
.........எங்கே போனீர்"