4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 05 FEB 1975
உதிர்வு 09 JAN 2015
அமரர் ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு
இறந்த வயது 39
ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு 1975 - 2015 புங்குடுதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 25.12.2018

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் காத்தாயே!
பண்போடும் பணிவோடும் பாசமாய் வளர்த்தாயே!
பலர்போற்றும் அறிவோடு பாரினில் வாழ்ந்தாயே!

வாழும் காலம் முழுதும் உங்களோடு இருப்பேன் என்று
நீங்கள் சொல்லியதால் எதோ தைரியமாய்
இனிதாய் வாழ்வோம் என்று எண்ணி இருக்கையில்
இடியே விழுந்தது போல் எல்லாம் நடந்தது ஐயா
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்துவிட்டு
ஒன்றும் சொல்லாமல் உத்தமனே நீ போக
உடைந்து போனேன் ஐயா உன் பிஞ்சு மகளோடு நான்...

நான்கு ஆண்டு ஆனதய்யா நான் எதையும் மறக்கவில்லை
வலிகள் மட்டுமே வாழ்கை என்று ஆனபின்
வாழ்கை என்னவென்று புரிந்து கொண்டேன் நான்
உறவுகள் எல்லாம் ஒதுங்கியே சென்றனர்
விழாக்களில் கூட விலக்கியே வைத்தனர்
வீழ்ந்து விடுவோம் என நினைத்தும் இருந்தனர்
போலி வேசமிடும் பொல்லாத மனிதர்கள் முன்
வாழவேண்டும் என வலிமை கொண்டேன் நான்

இதயம் தன்னில் எப்போதும் நீ இருக்க
உன் உதிரம் கொண்ட ஒருவர் துணை இருக்க
நீ கொண்ட நல்ல நண்பர்களும் கூட வர
தைரியத்தோடு நான் நாளும் உன் மகளை
நன்றாக வளர்த்து உன் கனவை நனவாக்கி
நித்தம் உன் நினைவோடு நீங்காமல் வாழ வைப்பேன்..

நான்கு ஆண்டு ஆனாலும் நாளும்
உன் நினைவு நெஞ்சோடு நிறைந்திருக்க
நாம் இவ் உலகில் நாளும் வாழ்கின்றோம்

உன் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


தகவல்: குடும்பத்தினர்(சுவிஸ்)

Photos