Born 18 SEP 1934
Rest 15 AUG 2019
Mr Pandary Somasundaram
இளைப்பாறிய பொறியியலாளர்
Age 84
Pandary Somasundaram 1934 - 2019 Thellipalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில்  புகழ் பூத்த சீமான் திரு.பண்டாரி அவர்தம் பாரியார் தங்கமுத்து அவர்களின் அருமைப் புத்திரனாக 18/SEP/1934 ஆம் ஆண்டில் திரு.சோமசுந்தரம் அவர்கள்  இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                            

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர்  தன் சகோதரங்களுடன் சேர்ந்து நன்கு படித்த இவர்  திரு.திருமதி பேரம்பலம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகளான சிவயோகம் அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக Dr.அன்பு, அஞ்சலா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து சதீஸ் சிவா,மயூரன் அண்ணாமலை போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அஜன், ஆரபி, நட்டாஜா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                 

மேலும் நன்கு படித்த இவர் பொறியியலாளராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன்  அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 15.08.2019 இல் 84 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

ஏற்றம் பல கண்ட எங்கள் உறவே
மாற்றம் விரும்பிய மனித உயிரே
காற்றில் மனக்கும் முல்லைப் பூவே
சேற்றில் மலர்ந்த செந்தாமரையே
சீற்றம் தவிர்த்து சிறப்பாக செயற்பட்டு
ஈற்றில் வீழ்ந்து இறைபதம் அடைந்தீரே