Born 26 FEB 1947
Rest 19 JUL 2019
Late Rasa Sivalingam
Age 72
Rasa Sivalingam 1947 - 2019 Urumpiray Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்.உரும்பிராயில் புகழ் பூத்த சீமான் திரு.இராசா அவர்தம் பாரியார் சவுந்தரம் அவர்களின் அருமைப் புத்திரனாக 26/FEB/1947 ஆம் ஆண்டில் திரு.சிவலிங்கம் அவர்கள் பரமேஸ்வரி, துரைசிங்கம், நாகரத்தினம், தர்மலிங்கம், நாகேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                            

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர்  தன் தந்தையுடன்  சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் குணேஸ்வரி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கவிதாஸ், றவிதாஸ், றஜீவன், சுஜீவன், துஜித்தா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து ரேகா, கிரியா, திசந்தினி, கார்த்திகா, நிமல்ராஜன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கீர்த்தி, கவிநயா, அபிசா, அபிநாஸ், அஸ்வின், சஜானா, சகீரா, சயந்தவி, அனுஜன், அபிநயா, நிமஷா, நிதுஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும்    வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும்  விளங்கிய இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக  விளங்கியதுடன் சகோதரபாசம்  கொண்டும் விளங்கினார்.இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 19.07.2019 இல் 72 வயதில் கனடாவில் உள்ள Markham  நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"புன்னகை முகமே                
......புன் சிரிப்பே
இன்மொழிப் பேச்சே                
......இளமை  உருவே
இரக்க மனமே                
...... இளம் தென்றலே
சிறக்க வாழ்ந்து
நாம் தவிக்க                
......எங்கே போனீர்"