Born 12 OCT 1924
Died 26 AUG 2019
Mrs Elizabeth Rajapoovathi Rajarathinam
Age 94
Elizabeth Rajapoovathi Rajarathinam 1924 - 2019 Ezhalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் ஏழாலையில் 12/Oct/1924 இல் திரு.திருமதி W.M ஜோசுவா தம்பதிகளின் அன்பு மகள் எலிசபெத் ராஜபூவதி அவர்கள் வயலெட் ஆனந்தம், வின்னி ராஜரத்தினம், Dr. W.D ஜோசுவா, யுனிஸ் தர்மசீலன் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் A.Y ராஜரத்தினம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக ரவீந்திரன், ரஜினி, தேவேந்திரன், யோகேந்திரன், ஜெயேந்திரன், செல்வேந்திரன், ஞானேந்திரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சாந்தி, சிறிகரன், ரூபா, பிறீடா, நளி, ரஞ்சி, மனோகரி, சித்திரா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து ஷிரான், ஷெரீன், ஜொனதன், பிரஹான், வித்தியா, வனோ, டிலோஷன், ஜெரான், வனிதா, சமந்தா, ஷோர்ணா, நிஷான், நிரோகன், நிருபனா, அமிர்தா போன்ற பேரப்பிள்ளைகளுடனும் சயானா, ஷர்மையா, ஜரன் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 26.08.2019 இல் 94 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.       

கண்ணாடி வதனம் ஒன்றை
............ காரிருள் சூழ்ததே
விண் நட்சத்திரம் ஒன்றை
........... சூரிய ஒளி மறைத்ததே
பண்ணிசை பாடிய குயில்
.......... பாதியில் பறந்ததே
கண்கள் கலங்கி அழ
.......... காலத்தால் மறைந்தீரே.