7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUL 2006
இறப்பு 10 JUL 2013
அமரர் அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன்
இறந்த வயது 6
அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன் 2006 - 2013 வவுனியா இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு
சந்தோசமாயிரு
துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
- அல்றிக் சௌஜன்யன்-

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. 

மழலை மாறா
உன் மென்மை
மனதில் என்றும்
தவழுமடா!
சுகமான காற்றாக
நீயிருந்தாய்
சடுதியில் நேற்றாகி(ப்)
போனதேனோ?

ஏழு வருடங்கள்- நீ
அன்பைப் பொழிந்தாய்
ஏழு வருடங்கள்- உன்
அருளைத் தந்தாய்
ஏழேழு பிறப்புகள்- இனி
உண்டேனும்
என்றும் வேண்டும் ஐயா- நீ
எம்முடனே!

வேகமும் விவேகமும்- உன்
விளையாட்டில் கண்டோமடா
கால்பந்து வீரனா(க்)க
கற்பனைகள் கொண்டோமடா
மைதானத்திலே நீ- ஓர்
விரைந்தோடும் குருவியடா
கருணைகாட்டும் பண்பினிலே
நீயோ அருவியடா

எண்ணாத நாளில்லை
எழுதாத வரிகளில்லை
புண்ணான எம் மனது
புன்னகைக்க நீயில்லை
சுவாசத்தில் காற்றானாய்
இதயத்தில் துடிப்பானாய்
கண்ணோடு மணியானாய்
கனவோடும் நீயானாய்

உலகில் சிறந்த அனைத்துமே
உனக்கும் கீழே தானே கண்ணே
விழியாய் ஒளியாய் நீயிருந்து
வழியாய் எம்முடன் வந்திடய்யா
தெய்வமே திருவே அருளே
அழகே அன்பே அமுதே
திரும்பவும் உன்னுடனே வாழும்
வரமே தருவாய் வருவாய் கண்ணே!!!


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles