6ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 19 JUL 2006
இறைவன் அடியில் 10 JUL 2013
அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்
இறந்த வயது 6
கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன் 2006 - 2013 வவுனியா இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு
சந்தோசமாயிரு
துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும் 
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
- அல்றிக் சௌஜன்யன்-

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், கிளிநொச்சியைச் சேர்ந்த கிறிஸ்ரிரூபன் நிமலினி தம்பதிகளின் அன்பு புதல்வர் ஆவார்.

கண்ணே கண்ணாக வருவாயா
கருவில் உயிராக மலர்வாயா
ஆனந்தம் மீண்டும் தருவாயா
அருகினில் மீண்டு தவழ்வாயா

நெஞ்சில் கனலது கொஞ்சமில்லை
நித்தம் அழுகைக்கும் பஞ்சமில்லை
செஞ்சொல்லால் வருடும் தேவதையே
சித்தம் தெளிவிக்க வா இனிதே

குறும்பு காண மனம் ஏங்குதடா
குறுஞ்சிரிப்புக்கு ஆவல் மேவுதடா- உன்
நற்செயல் எதையும் காணாமலே
நடக்கின்ற பிணமாக ஆனோமடா

எங்கள் கண்ணே- எங்கள்
சின்னக் கண்ணே!

‘கடவுள்’ அது உண்மையா- அறியோம்
இருந்தால் ‘அது’ நீயே- உணர்ந்தோம்
கடவுளைப் பெற்றிட்ட
பெருமையைத் தந்தாய்
கடவுளை வளர்த்திட்ட
வாழ்வையும் தந்தாய்
கடவுளாய் வணங்கிடும்
துயரமும் தந்தாய்
கடவுளாய் இருந்து நீ
மற்றோரைக் காப்பாய்....

எமது செளக்குட்டியின் நினைவுத்திருப்பலி வட்டக்கச்சி புனித சூசையப்பர் தேவாலயத்தில் 10-07-2019 புதன்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். இத்திருப்பலியில் அனைவரும் கலந்து கொண்டு எமது செல்லக்கண்மணியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles