Born 25 FEB 1926
Died 10 AUG 2019
Mrs Jeyamangaleswary Senathirajah
Jeyam, Mangalam
Age 93
Jeyamangaleswary Senathirajah 1926 - 2019 Alvay Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,கற்பகதரு நிறைந்து காணப்படுவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வடமராட்சி அல்வாயில் 25/FEB/1926 இல் திரு.திருமதி தங்கம்மா வெற்றிவேல் தம்பதிகளின் அருமை மகளாய் ஜெயமங்கலேஸ்வரி அவர்கள் Dr.வெ.செல்வரட்ணம், சிவஞானரட்னம், பரமேஸ்வரி பரராஜசிங்கம், ஆனந்தரட்னம் போன்ற சகோதரங்களுடன்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர்  மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் மாவிட்டபுரம் திரு.திருமதி அழகம்மா செல்வதுரை தம்பதிகளின் அன்பு மகன் திரு.சேனாதிராஜா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக சாந்திகுமார், ராஜ்குமார், சியாமளா, ஜெயக்குமார், சசிகலா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து கௌரி, அருனா, வரதராஜா, தயாலினி போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து டிலன், மகிமன், ஆதித்தன், சிவப்பிரியா, ஆதவன், ஐங்கரன், அபினா, அபிஷன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் ஹற்றன்,கொழும்பு என்பவற்றில் வாழ்ந்த இவர் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும், ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 10.08.2019 இல் 93 வயதில் பிரித்தானியாவில் உள்ள London  நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.       

"கஸ்ரங்கள் விலக்கி    கடமையை செய்து
இஸ்ர மனதுடன்    இன்பமாய் வாழ்ந்த
புஸ்ப குணமே   உங்கள் குணம்
விஸ்வ ரூபமாகி   விடிவைத் தந்த
இஸ்ர தேவதையே   எங்கே போனீர்"