Born 20 FEB 1927
Died 18 JUN 2019
Mr Sinnathamby Muthuthamby (Sinnaddythamby)
Age 92
Sinnathamby Muthuthamby 1927 - 2019 Suthumalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் சுதுமலையில் புகழ் பூத்த சீமான் திரு.சின்னத்தம்பி அவர்தம் பாரியார் திருமதி தில்லைவனம் அவர்களின் அருமைப் புத்திரனாக 20/FEB/1927 ஆம் ஆண்டில் திரு.முத்துத்தம்பி அவர்கள் இவ் அழகிய பூமியில் தையல்முத்து, மீனாட்சி, விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.                                        

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும்  சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், சித்தங்கேணியைச் சேர்ந்த திரு.திருமதி மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் மீனாட்சிப்பிள்ளை அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக உமாதேவி, கண்ணதாசன், சிவதேவி, தில்லை நடராஜன், தில்லைக்கரசி, விக்னேஸ்வரன் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து டானியலா, சந்திரசேகர், தனுஜா, கருணலோலன், சங்கீதா என்பவரைத் திருமணம் முடித்து வைத்து நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கௌசிக், அபிராமி, அபிஷேக், அஸ்மிதா, ஆரபி, ஆதவன் போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் சின்னட்டித்தம்பி எனவும் அழைக்கப்படும்  இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 18.06.2019 இல் 92 வயதில் தெஹிவளை நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"சுதுமலை மண்ணின்   
......சுடர் ஒளியே
பதுமைக் குணமே   
......பாச உயிரே
எது வரினும்   
.....அஞ்சாத உறவே
அற்புதம் ஆற்றி   
.....அகிலம் துறந்தீரே