3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 27 JUL 1954
ஆண்டவன் அடியில் 28 MAY 2017
அமரர் தர்மநாயகி இரவீந்திரா (சூட்டி அக்கா)
இறந்த வயது 62
தர்மநாயகி இரவீந்திரா 1954 - 2017 வவுனியா இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 25.05.2020

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மநாயகி இரவீந்திரா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புக்குரியவளாய் ஆறுதலுக்கு இருப்பிடமாய், இன்பத்திற்கு இருப்பிடமாய், இல்லத்திற்கு உறைவிடமாய், ஈகையில் டில்லை அற்றவளாய், ஊருக்கெல்லம் சூட்டியக்காவாக வாழ்ந்து எம்மை விட்டு எங்கே மறைந்தீர்கள்?

கணீர் என்ற குரலும், அன்பான வார்த்தைகளும், துன்பத்தில் ஆறுதல் தருபவராகவும், வருத்தத்திற்கு கைமருந்து சொல்லும் வைத்தியராகவும், உடலாரோக்கியத்திற்கு ஆலோசனைதரும் ஆலோசகராகவும், அன்னையாக உடன்பிறவா சகோதரியாக எம்மையெல்லாம் காத்தீர்களே.
இப்போ எங்கு சென்றீரோ?

இரக்கமற்ற காலன், கொடிய நோயைத்தந்து இடையில் உம்மைப் பறித்தானே! யாரிடம் போய் சொல்வோம். இராமர்- சீதை போல் நீங்களும் சூட்டியண்னையும் இருந்தீர்களே! இன்று தனியே தவிக்கவிட்டு கானகம் சென்றீரோ? எல்லோர் மனதிலும் காற்றாய் புகுந்து மாயமாய் மறைந்துவிட்டீர்களே சூட்டியக்கா!

அவர் பிரிவால் வாடும் சூட்டியண்ணா மற்றும் உடன் பிறப்புக்கள், உற்றார், உறவினர் யாவருக்கும் எமது ஆழ்ந்த துக்கத்தை தெரிவிக்கிறோம்.

உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனை இறைஞ்சும்
Brake, Berne வாழ் தமிழ் உறவுகள்

தகவல்: Brake, Berne வாழ் தமிழ் உறவுகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles