மரண அறிவித்தல்
பிறப்பு 29 DEC 1948
இறப்பு 17 MAY 2019
சுப்பிரமணியம் யோகநாதன் 1948 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாதேவி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

நித்யா, சுசிப்பிரியா(ஜேர்மனி), சிவரஞ்சினி(சுவிஸ்), சுபாஷினி(கெளரி- கனடா), சுகன்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காராளசிங்கம், ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமேஷ்குமார், கணேஷானந்தன், பிரசன்னா, கிருஷ்ணராஜ், சனோச் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நித்தியானந்தன், நிர்மலாதேவி, காலஞ்சென்ற நிமலக்கண்ணன் மற்றும் சிவகுமாரி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆர்ணியா, மிதுஷா, அபிஷா, ஹரிணி, அனுஜன், அபினா, லக்ஸான், யதுஷான், லக்ஸி, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-05-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு