Born 11 JUL 1937
Died 14 JUL 2019
Mrs Parunanthu Justheenamma (யோசேப்பம்மா)
Age 82
Parunanthu Justheenamma 1937 - 2019 Mandaitivu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த மண்டைதீவு 4 ஆம் வட்டாரத்தில் 11/JUL/1937 ஆம் ஆண்டு சாமிநாதர் அக்கினேசம்மா தம்பதிகளின் அன்பு மகளாக யுஸ்ரினம்மா இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அன்பும் பண்பும் நிறைந்த இவர் ஐயாத்துரை, அன்னப்பிள்ளை, றூபி, ஜெமிஸ், இராசகிளி போன்றவர்களின் சகோதரியாக குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் மனுவேல்பிள்ளை றோசலீனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் மனுவேல்பிள்ளை பர்னாந்து என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பெரியவன், சின்னராசா, யோசெப் சீனி, யோகன், தொம்மை, செல்வதி, செல்வி, நெல்சன், செல்வந்தி, பத்திமாதேவி, நிக்சன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அருள்மணி, கில்டா, றெஜினா, விஜினி, றானி, மஞ்சு, யோன்சன், அன்ரன், சுலக்ஷனா, அல்போன்ஸ், பீற்றர், சுபா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும்,பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

மேலும் யோசேப்பம்மா எனவும் அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.அத்துடன் அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு விளங்கியதுடன்.குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 14.07.2019 இல் 82 வயதில் மண்டைதீவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மண்டைதீவின் மஞ்சல் நிலவே
அண்டை மக்களுடன் அன்புடன் வாழ்ந்து
நின்று சேவை செய்து
நிம்மதி அடைந்து
எங்கும் புகழ் பரப்பி எம்முடன் வாழ்ந்து
எமை விட்டுப் பிரிந்தீரே