2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUL 1931
இறப்பு 12 DEC 2018
அமரர் செல்லப்பா பேரின்பம்
முன்னாள் உரிமையாளர்- Yoga Trading Company, பிரபல வர்த்தகர், சமூக சேவையாளர் Colombo-12,
இறந்த வயது 87
செல்லப்பா பேரின்பம் 1931 - 2018 புங்குடுதீவு 12ம் வட்டாரம் இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 19.11.2020

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு, மத்தி, யாழ்ப்பாணம், கொழும்பு, பாணந்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளர் வள்ளல் பெருந்தகை அமரர் ஸ்ரீமான் உயர்திரு செல்லப்பா பேரின்பம் அவர்கள் பேரின்பப் பேறு பெற்ற இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

என்றும் திருவே நிறைந்த
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டு இரண்டு என்ன பல ஆண்டுகள் சென்றாலும்
ஆறாத கவலை, மாறாது என்றும்
எங்கள் நெஞ்சில் உங்கள் நினைவுகள்..

தாயுமானவராய் இருந்து
ஆறுதலாய் இருந்து
நாம் ஏற்றம் காண நல்வழி நடத்தி
நல்வழி காட்டிய பேருதவி புரிந்த
எங்கள் பெரும் செல்வப் பேறே

என்ன தவம் செய்தோம்
நானிலத்தில் உங்களை பெற
உங்கள் அமைதியான அன்பே
உருவான தோற்றமும் அன்பு
முகமும் கருணை உள்ளமும்
அனைவரையும் அன்போடு
அரவணைக்கும் இனிய பண்பும்
கனிவான பேச்சும் உதவி செய்யும் கரங்களும்
நினைக்கையில் பெருமை கொள்ளுதையா

வானுறையும் தெய்வத்துள் இருந்து
எங்கள் அனைவரையும் ஆசீர்வதியுங்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....     

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Nadarajah Hariharan Velanai, Hamburg - Germany, Newbury Park - United Kingdom, Karampon View Profile
  • Kathiresapillai Suthaharan Pungudutivu 12th Ward, Bern - Switzerland View Profile
  • Manonmani Rasaiah Pungudutivu 12th Ward, Montreal - Canada View Profile
  • Ammakuddy Rajaratnam Chavakachcheri Kalvayal, Canada View Profile