Born 22 FEB 1961
Died 11 JUN 2019
Mr Nadarajah Ravichandran
Age 58
Nadarajah Ravichandran 1961 - 2019 Jaffna Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின்  அழகு நிறைந்த இடமும்,மிக அருகில் உள்ளதும் படித்தவர்களைக் கொண்டதும், நாச்சிமார் அம்மன் அருள்பாலிக்கும் இடமும்,பயன்தரு மரங்களை கொண்ட யாழ்/நாச்சிமார் கோவிலடியில் 22/FEB/1961 இல் திரு.திருமதி நடராஜா மாணிக்கம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.ரவிச்சந்திரன் அவர்கள்  இவ் அழகு நிறைந்த இடத்தில்   மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ராஜகுமாரி, சாந்தகுமாரி, வசந்தகுமாரி, விஜயகுமாரி, கமலகுமாரி எனும் உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி இராஜலிங்கம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் விஜயசரோஜா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பிரதாப், பிரியா, பிரியந், பிறீபன், அனிஷன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.                                           

மேலும்  இவர் கடின உழைப்பாளியும் கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.06.2019 இல் 58 வயதில் டென்மார்க்கில் உள்ள Herning நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வளமான வாழ்வில் விளைந்திட்ட உறவே
அளவில்லா பாசத்தை அருளிய உள்ளமே
அன்பு மழையை அகிலத்தில் தூவி
முற்றப் பூவே முடித்தாயே வாழ்வை
நித்தம் ஏங்கி நினைவில் அழுகிறோம்.