Born 27 JUL 1955
Rest 24 APR 2019
Late Suriyathasan Ponnuthurai
Age 63
Suriyathasan Ponnuthurai 1955 - 2019 Vannarpannai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், யாழ்ப்பாணம் நகருக்கு அன்மையிலும் படித்த மக்களை அதிகம் கொண்டதும், அழகிய கோவில் அமைந்த இடம் , வாழைத்தோட்டம்,  மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் 27-07-1955 இல் திரு திருமதி பொன்னுத்துரை(SEP) பவளம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சூரியதாசன் அவர்கள் மனோரதி, ஜெயரதி ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார். மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர்  வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திரு.திருமதி குணரத்தினம் பர்வதலட்சுமி தம்பதிகளின் அழகுப் பெண்ணான மாலதி  அவர்களை திருமணம் முடித்து  இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக சுவீற்ரா, சூர்யா, மேனுயா போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.

இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும்  விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஜேர்மனியில் பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர்  24.04.2019 இல் 63 வயதில் ஜேர்மனியில் உள்ள Oberhausen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நாச்சிமார் கோவிலடி   
......நல் முத்தே
பூ முகமே   
......புன் சிரிப்பே
வசீகரப் பேச்சே   
.....வள்ளல் குணமே
வாடி வதங்குகிறோம்   
.....வாழ்விழந்து தவிக்கிறோம்