Born 20 MAR 1954
Rest 23 AUG 2019
Mr Sellathurai Ponnaiah (Dr Pons)
Age 65
Sellathurai Ponnaiah 1954 - 2019 Kodikamam Sri Lanka

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய  இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட கொடிகாமத்தில் 20/MAR/1954 இல் கொடிகாமம் ஆயுர்வேத வைத்தியரான திரு.திருமதி செல்லத்துரை வல்லவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.பொன்னையா அவர்கள்   இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தங்கலட்சுமி, சிவகுருநாதன், கந்தசாமி, வடிவாம்பிகை, ஞானேஸ்வரி, தில்லைநாதன், இந்திராதேவி, இலிங்கநாதன், மங்கையற்கரசி எனும் சகோதர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், நல்லூர் ஆயுர்வேத வைத்தியரான திரு.திருமதி சீனிவாசகம் பூரணம்  தம்பதிகளின் அன்பு மகள் சிறிகமலாம்பிகாதேவி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சர்மிளா,வாசுகி எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து ரமணன்,விபுலன் என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சகானா,ரிஷிஆரியன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                              

மேலும் Dr.pons என்று அழைக்கப்படும் இவர் வைத்தியராக நல்ல சேவையாற்றியதுடன்,நல் அறிவுரைகள் வழங்குவதில் திறமைசாலியும்,நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும் விளங்கிய இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.08.2019 இல் 65 வயதில் ஜேர்மனியில் உள்ள Siegen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அழகிய உருவே அறிவுரை நாயகனே
கல்வியில் சிறந்த வைத்திய தெய்வமே
நண்பர்கள் சூழ நகைச்சுவை பொழிந்து
இன்பங்கள் தரும் இனிமை உறவே
எங்கே போனீர் எமைப் பிரிந்து
அன்பு மனம் தவிக்க அனைவரையும் பிரிந்தீரே