பிரசுரிப்பு Contact Publisher
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 10 JAN 1956
விண்ணில் 16 MAR 2016
அமரர் சண்முகம் மகேஸ்வரநாதன் (Italy Uncle)
இறந்த வயது 60
சண்முகம் மகேஸ்வரநாதன் 1956 - 2016 நயினாதீவு இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் மகேஸ்வரநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமைவிட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிடநியதி ஆனாலும்
ஆண்டவன் செயலை எண்ணி ஆறிடவும் முடியவில்லை

நீண்டு செல்லும் நாட்களிலே நிழல் வடிவில் தெரிகின்றிர்
தேடித்தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம்
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம் நாம் தினமும்
காத்திருக்கும் உம் உறவுகளின் கவலை தீர்க்க
கல்லறை திறந்து வருவீரோ ஒரு முறை..!

அனுதினமும் தெரிகின்ற எம் குடும்பத்
தெய்வமானவரேமாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்! தினம்! துடிக்கின்றோம்

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
கிருபா
ஜசிந்தா