மரண அறிவித்தல்
மலர்வு 18 MAR 1947
உதிர்வு 12 JAN 2020
திருமதி நகுலேஸ்வரன் கனகநாயகி
வயது 72
நகுலேஸ்வரன் கனகநாயகி 1947 - 2020 புங்குடுதீவு 11ம் வட்டாரம் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 13 ஜெம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் கனகநாயகி அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபாபதி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தவச்செல்வி(இந்தியா), மதியழகன்(சுவிஸ்), அன்பழகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வரதலெட்சுமி, சண்முகராஜா(சுவிஸ்), புஸ்பவதி, புஸ்பராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, கணேசன்,  காலஞ்சென்ற புவனேஸ்வரி(ஜேர்மனி), குலநாயகம், யோகன், மற்றும் பரமேஸ்வரி(கனடா), நந்தகுமார், புவனேஸ்வரி(சுவிஸ்), திலகேஸ்வரி(ஈசா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரவிந்திரன்(பிரான்ஸ்), தர்மினி(சுவிஸ்), வினோசியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதிஸ், பவித்திரன், ராகவி, பிருந்தா, சாரங்கா, சாரணியா, சிறிஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுலன், வித்யா, பாமினி ஆகியோரின் பெரிய தாயாரும்,

கார்திக், தர்சிகா, சகானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தனுஸ், யதுர்ஷா, பனுஷன், வர்ஷா, பியசகி, துர்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-01-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 14-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: அன்பழகன்- மகன்

தொடர்புகளுக்கு

அன்பழகன் - மகன்
மதியழகன் - மகன்
தவச்செல்வி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles