Born 14 SEP 1962
Died 06 MAY 2019
Pushpamalar Tharmarajah 1962 - 2019 Mukamalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்ததும்,போரின் உச்சம் கண்ட இடமாக சாண்றாக உள்ளதும்,கற்பகதரு(பனை) நிறைந்து காணப்படும் இடமும் தெங்கு தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கிளிநொச்சி முகமாலையில் 14/SEP/1962 ஆம் ஆண்டில் தம்பையா  கந்தையா தங்கம்மா தம்பதிகளுக்கு  அன்பு மகளாக புஷ்பமலர் அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் பாலசுந்தரம், ராஜன், லிங்கம், செல்வம், ராணி, மனோ, தவா, சிவா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து  மெல்ல மெல்ல வளர்ந்து  பெரியவளானதும் சுப்பையா பார்வதி தம்பதிகளின்  அழகிய ஆண் மகனான தர்மராஜா என்பவரைத் திருமணம் முடித்து  மகிழ்ச்சியாக வாழ்ந்து ராஜீவ், ரவின் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து  வளர்த்ததுடன், தனது மகனை மைக்கே என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து மாமிக்குரிய கடமையை சிறப்பாக செய்ததுடன், ரபேல் எனும் பேரப்பிள்ளையை தூக்கி முத்தமிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                

மேலும் ரஞ்சி என அனைவராலும் அழைக்கப்படும் இவர் தனது குடும்பத்தில் அன்பு கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும்,  குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன்,பிள்ளைகள்,பேரப்பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 06.05.2019 இல் 56 வயதில் பிரித்தானியாவில் உள்ள Bromley நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"முகமாலை தந்த               
......முத்தான உள்ளமே
அழகிய மதியே                
......அன்பு உள்ளமே
புன்னகை முகமே                
....பூ விழியே
கண்மடல் நோவுற                
......கலைந்தீரே எமை விட்டு"