Born 12 FEB 1942
Died 13 JUN 2019
Mr Muttiah Kanesalingam
முன்னாள் City Seven Stars Colombo-11 உரிமையாளர்
Age 77
Muttiah Kanesalingam 1942 - 2019 Pungudutive 1st Ward Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 1ஆம் வட்டாரத்தில் 12/FEB/1942 ஆம் ஆண்டில் திரு.திருமதி முத்தையா பொன்னம்மா தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.கணேசலிங்கம்  அவர்கள் தம்பிராசா, கனகரட்னம், நாகேஸ்வரி, கோபாலபிள்ளை, புவனேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                        

அத்துடன் அழகு நிறைந்த இவர் வளர்ந்து  பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன்  திரு.திருமதி சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான தவயோகமலர் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து தனஞ்செயன், ஜலஜா, சுவர்ணலதா, மணிவண்ணன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து சீலன், சசிகாந்தன், ஹிமாலி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கிஷாணி, கிஷிக்கா, பிரவின், நிருஷி, பிரசன்னா, நிஷா, திலக்ஷன், ஆதித்தியா, கௌதம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் இவர் City seven stars colombo-11 உரிமையாளராக விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் வள்ளலும் ஆவார். இவ்வாறு  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள்  என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர்  13.06.2019 இல் 77 வயதில் கொழும்பு நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். 

அலைகடல்  இசையின் 
......... அவதாரம் எடுத்து 
மலை என உயர்ந்து 
..........மகிழ்ச்சியாய் வாழ்ந்து 
பலவகை உதவிகள் 
........... பக்குவமாய் செய்து 
சிலை என ஆகி 
...........சிவனடி சேர்ந்தீர்