மரண அறிவித்தல்
அன்னை மடியில் 03 APR 1932
இறைவன் அடியில் 23 FEB 2021
திருமதி சண்முகதேவி சீவரட்ணம்
வயது 88
சண்முகதேவி சீவரட்ணம் 1932 - 2021 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகதேவி சீவரட்ணம் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பாக்கியம்(இராசமணி) தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற அப்பாத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவசக்தி, முகுந்தன், ரமணஹரன், அருணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமலிங்கம், சுகந்தி, சிவராகினி, சிவகுமாரி(மஞ்சு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முத்துலிங்கம், கமலரஞ்சினி, பாலசரஸ்வதி, விவேகானந்தராஜா, கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், லோகேஸ்வரி, இராஜலக்சுமி, இராஜரட்ணம், குணபாலசிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைகுந்தன், எமிலி, ஹம்சத்வனி, வினய், விநாயகன், டிலாரா, ஹரினி, நாராயனி, ஷோபினி, ராம்சரன், ரமணீசன், சுவாசினி, வத்சன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

நீல், அலாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 38/02 A, SHRUbbery gardens bambalapitiya colombo 4 என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 01:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசக்தி - மகள்
முகுந்தன் - மகன்
ரமணஹரன் - மகன்
அருணன் - மகன்

Photos

No Photos

View Similar profiles