1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JAN 1963
இறப்பு 10 AUG 2019
அமரர் சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் (சந்தி)
இறந்த வயது 56
சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் 1963 - 2019 அளவெட்டி இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 30.07.2020

யாழ். அளவெட்டி சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஓடி மறைந்ததுவோ
தங்கள் நினைவுகள் மட்டும் நிறைகிறதே
வேண்டுதல் இன்னும் குறையவில்லையே
உங்கள் ஆசைமடி வேண்டி நிற்கின்றோம்
விழிகள் மீண்டும் ஒருமுறை காணுமோ    

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....   

மனைவி பிள்ளைகள் சொந்தங்களோடு
சேர்ந்த்திருக்க மறந்து
நீங்கள் சென்றதேனோ
எம் செல்வமே பக்கத்துணை
நீங்கள் இன்றி பயனேது எமக்கு...!    

ஆண்டு ஒன்று எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எமது மனம் ஏற்றதில்லை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
எம்முடன் நீங்கள் வாழ்வதாகவே
பாவனை செய்கின்றோம்...!  

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள் 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

இயற்கை  அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் அளவெட்டி சிறுவிளானில்  02/JAN/1963... Read More

Photos

No Photos

View Similar profiles