Born 12 JAN 1945
Rest 10 AUG 2019
Mr Kanagaratnam Sinnarajah
பழைய மாணவர் - உரும்பிராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் (புவியியல் சிறப்பு பட்டதாரி). முன்னாள் மத்தியவங்கி உத்தியோகத்தர், மற்றும் திட்டமிடல் அதிகாரி- மன்னார், முல்லைத்தீவு, வவுனியா. முன்னாள் உரிமையாளர் CTR வானொலி கனடா, மற்றும் KNR துரிதபரிமாற்றுச் சேவை உரிமையாளர்.
Age 74
Kanagaratnam Sinnarajah 1945 - 2019 Kondavil Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கோண்டாவிலில்  புகழ் பூத்த சீமான் திரு.கனகரத்தினம் அவர்தம் பாரியார் பொன்னம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 12/Jan/1945 ஆம் ஆண்டில் திரு.சின்னராசா அவர்கள் நாகராசா, கிருபானந்தம், பராசக்தி, கமலாதேவி, மகேசன், சதானந்தன், சற்குணநாதன், கிருஷ்னானந்தன் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                            

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர்  தன் சகோதரங்களுடன் சேர்ந்து நன்கு படித்து உயர்ந்த இவர்  திரு.திருமதி நவரத்தினம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகள்  வசந்தரூபா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக ராகுலன், சிந்துஜா, நர்மதா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து தனுஜா, குமரன், Ron போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து இஷானி, மாலிகா, ஓவியா, இனியா, ஆன்யா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                 

மேலும்  உரும்பிராய் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று புவியியல் சிறப்பு பட்டதாரியாகியதுடன், மத்திய வங்கி உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன்,மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா திட்டமிடல் அதிகாரியான இவர் கனடா சென்று CTR வானொலி உரிமையாளராக செயற்பட்டதுடன், KNR துரிதபரிமாற்றுச் சேவை உரிமையாளராகவும் சேவை செய்த இவர் அன்புள்ள நல்லுள்ளமாகும்.                                                                                                    

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 10.08.2019 இல் 74 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அறிவில் சிறந்த அன்பு உள்ளமே
நன் நெறி காட்டி நலமாக வாழ்ந்து
சேவை செய்த செயல் வீரனே
பாவை மனதுடன் பல பரினாமம் கண்டு
வாழ்வில் உயர்ந்து வையகம் ஆண்டு
வாடி வீழ்ந்தீரே எம் வாழ்க்கை உயிரே