- No recent search...

புங்குடுதீவு இறுப்பிட்டி 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் அன்னசோதி அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று இறைப்பதம் அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான சுப்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரன், ஜெகதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வைதேகி, வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருட்பாக்கியம், காலஞ்சென்ற பரராஜசிங்கம்(அருமை), தனவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகசபை, அருணாசலம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்,
கலையரசி, ரமேஷ்குமார், சதீஸ்குமார், துஸ்யந்தினி, கோபிசாளினி, துவாரகா, வேணு, பிருந்தா, சணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பாமனா, டிசானா, டினோசன், ஜான்சி, பிரவீன், தஸ்மிகன், சரீனா, தரணிகா, தஷ்வின், தனுஸ்ரீ, சாணுசா, அஸ்வின், ஆருத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் No. 97, புங்கன்குளம் வீதி, அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.