மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் செல்லத்துரை
இறப்பு - 08 JAN 2021
சிவபாக்கியம் செல்லத்துரை 2021 வதிரி இலங்கை
Tribute 38 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், மாகோ, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்லத்துரை அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வாரித்தம்பி, கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வாரித்தம்பி செல்லத்துரை(EVS-Maho) அவர்களின் பாசமிகு மனைவியும்,

புஷ்பகாந்திமலர், புஷ்பராஜன், புஷ்பலதா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

பாலசிங்கம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற இராஜேந்திரம், செல்வராணி ஆகியோரின் அன்பு அக்காவும்,

இராஜதுரை, மங்கையர்க்கரசி, தனோ தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற நாகம்மா, பரமேஸ்வரி, பிரன்சினா, சாலட் நோனா, காலஞ்சென்ற தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மைதிலி ஜெய்சங்கர், ஷியாமிலி நிர்ஷாந்தன், அஷ்வின், அஞ்சலி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

ஹரிணி, தனுஷ் ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,  

மாயா மீனாட்சி, ரிஷி சங்கர், ஆதித்யன், சாகித்யன் ஆகியோரின் செல்லப் பாட்டியும்,

சசிகலா ராஜசேகர், வாசுதேவன், திலீபன், துஷ்யந்தி அரவிந்தன், மயூரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

மஞ்சு, வசந்தி, லாவண்யா, சஞ்சு ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

 நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2021 திங்கட்கிழமை  அன்று Covid -19 விதிமுறைகளுக்கமைய குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜதுரை - மருமகன்
லதா - மகள்
புஷ்பராஜன் - மகன்
பாலசிங்கம் - சகோதரர்
செல்வராணி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

View Similar profiles