Born 08 AUG 1935
Died 07 SEP 2019
Mrs Thilagavathi Vishvanathan
Age 84
Thilagavathi Vishvanathan 1935 - 2019 Velanai West Sri Lanka

Tribute

Ambalavanar Sellathurai 09 SEP 2019 Canada

திடீரென விண்ணுலகெய்திய திலகவதி விசுவநாதன் அவர்களின் சோகச்செய்தி வேலணை சிற்பனைக் குழுமத்தை அடியோடு அதிரவைத்துள்ளது. பிரிந்தவர் ஆலய தொண்டில் முன்னின்று பணியாற்றிய குடும்ப பாரம்பரியத்தை உடையவர்.இவரது தயார் 'வையகம்' அவர்களும், பெரியம்மா 'பிள்ளைச்சாமி' அவர்களுமான இரு சகோதரிகளும் சிற்பனை ஆலயத்திற்கு ஆற்றிய தொண்டு எம் ஆலய சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. ஐம்பதுகளின் ஆரம்பத்தில் நிலவிய வறுமையால் ஆலய பூசை, நைவேத்திய பணி நிதிக்காக 'பிடியரிசித்தொண்டுச் சேவை' நிமித்தம் காலத்திற்குக்காலம் இவர்கள் ஊரைச் சுற்றிவரும் காட்சி என் அகக் கண்ணில் இன்றும் உளது.தொய்ந்த இலையில் இருந்த ஆலய நிருவாகத்தையும் இவர்கள் கவனித்தவர்கள். இவர்கள் வழியில் எம் திலகவதியார், தம் பிள்ளைகள், மருமக்கள் மூலம் பெரிய அளவில் சிற்பனை முருகனாலய தொண்டைத் தெடர்ந்தபடி இருந்தவர்கள்.

அம்மையாரின் இழப்பு இரத்த உறவுகளை மட்டுமல்ல அவர் போஷித்த ஆலய அடியார்களையும் உலுக்கியுள்ளது.அமரரின் இரத்த உறவுகள் எதையும் தாங்கும் இதயம்பெற இறைவனைப் பிரார்த்திப்பதோடு மறைந்தவர்க்கு எம் இறுதி அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம்.
-மார்க்கம், கனடா வாழ் வேலணை வாணர் குடும்பம்

Tributes