Born 08 AUG 1935
Died 07 SEP 2019
Mrs Thilagavathi Vishvanathan
Age 84
Thilagavathi Vishvanathan 1935 - 2019 Velanai West Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் வேலணை மேற்கு சிற்பனையில் 08/AUG/1935 இல் செல்லத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளாக திலகவதி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.சபாரத்தினம், கோமேதகவள்ளி மற்றும் தேவராசா ஆகிய சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.

இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனான, விஸ்வநாதன் என்பவரைத் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக,ராசாத்தி, யோகநாதன், லலிதா, செல்வநாதன், வாசுகி, ரகுநாதன் ஆகிய பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணிபோல் பாதுகாத்து வளர்த்து, ஜெயகுமாரி, பாலசூரியன், தயாநிதி, கங்கைவேணியன், நிசாந்தி போன்றவர்களைத் திருமணம் செய்து வைத்து, பிரியந், சுகந், மயூரன், மதுரன், ராகவி, ஆருஜன், ஆருதி,பானுரேகா- சபேசன், பானுப்பிரியா- சுரேன், சுதர்ஷன், திவ்யா- நிஷாந், சுகந்தன், பிரஷாந்தி, ரமேஷ், சுகந்தி, கோகுலா எனும் பேரப்பிள்ளைகளுடனும், வருண், சங்கவி, பிரவிந், வாகினி ஆகிய பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கருணையும் நிறைந்தவராக விளங்கினார்.மேலும் அன்பும் மகிழ்ச்சியும் புன்சிரிப்பும் கொண்டு, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 84 வயதில் இலங்கையில் அகாலமரணம் அடைந்தார்.

”எப்போதும்
புன்னகை முகமுடன்
புதுமலர் போல் சிரித்திடும்
கருணை உறவே
உங்களை எண்ணி
கலங்கி அழுகிறோம்”