பிரசுரிப்பு Contact Publisher
கண்ணீர் அஞ்சலி
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல்
இறப்பு - 21 APR 2019
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீர்த்தவர்களுக்கான இரங்கல் 2019 இலங்கை இலங்கை
Tribute 208 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

இன்று காலை இலங்கையில் இடம்பெற்ற  தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கொல்லப்பட்டவர்களின்  குடும்பத்தினருக்கு எமது ஐ பி சி, தமிழ்வின் , லங்காசிறி இணையத்தளம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.  

 அதேவேளை, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் எமது இணையத்தளம் பிரார்த்திக்கிறது.


உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே பகிருங்கள்


தொடரும் அவலம்
............................ 

விடியல் காலையில் விடியாத கவலையாய்
தலைநகரம் கொழும்பில் தலைவிரிந்த அநீதி
கிழக்குவரை விரிந்தது 

மண்டியிட்டு  பிரார்த்தித்த மனிதர் நிலையோ
மண்ணில் இரத்தமும் குற்றுயிருமாய்

மனிதநேயம் மறந்த கயவரின் செயலால்
மாதா சிலையோ இரத்தக் குளியலாய் 

கொச்சிக்கடை அந்தோனியாரில் கொத்துக்கொத்தா சதைகள்
குடும்பத்தைப் பிரிந்த உறவுகள் கதறலாய் 

உயிர்த்த நாளில் உயிரற்ற மக்களாய்
உருவம் சிதைந்து உருமாறிய கோலமாய்  

என்னவோ நடந்தது
ஒன்றும் புரியவில்லை ஏதுமே எட்டவில்லை

நாம் என்ன செய்தோம் 
நல்லதையே செய்தோம்
உயிர்த்த தேவனை ஒற்றுமையாய் வரவேற்றோம்

எம்முடனே எதிரி இருப்பான்
எல்லோரையும் நொடிப் பொழுதில் சிதைப்பான்-என
எவருமே நினைத்ததில்லை

வேண்டாம் மூடரே விபரீத விளையாட்டு
மனித உயிர்கள் மகத்தானது புரிந்து கொள்க.

தகவல்: RIPBOOK

கண்ணீர் அஞ்சலிகள்

Photos