மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 1967
இறப்பு 27 FEB 2021
திரு நக்கீரன் பாலசுப்பிரமணியம் (செழியன்)
வயது 54
நக்கீரன் பாலசுப்பிரமணியம் 1967 - 2021 கல்வியங்காடு இலங்கை
Tribute 69 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காடு வேலாந்தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Wil ஐ வதிவிடமாகவும் கொண்ட நக்கீரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(தொலைத்தொடர்பு நிபுணர்) புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Bernad ஞானசேகரம்(இளைப்பாறிய கூட்டுறவு மேற்பார்வையாளர்) இராணி அந்தோனியாப்பிள்ளை அருமை மருமகனும்,

அகஸ்ரா(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுரன்(இயந்திர பொறியியலாளர்), மிலான்(கணனி பொறியியலாளர்), பாரி(வணிக சட்டமாணவர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஜனி(கனடா), நெடுஞ்செளியன்(கனடா), ரோகிணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகுமார்(அவுஸ்திரேலியா), சூரியகுமார்(ஜேர்மனி), ஜெயக்குமார்(வவுனியா), கமலநாதன்(இலங்கை), காலஞ்சென்ற இலங்கைநாதன், பேனார்ட் அன்ரன்(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை), Dr. பேனாட்(திருகோணமலை), நவம்(சுவிஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ஐங்கரன்(கனடா), லவன்(கனடா), தூஷானா(கனடா)  ஆகியோரின் அன்பு தாய் மாமாவும்,

கபிலன்(கனடா), பிரிந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Summary

Photos

No Photos

View Similar profiles