Born 01 FEB 1937
Died 13 JUN 2019
Mrs Annaluxmy Nagarasa
Retired Teacher Drieberg College
Age 82
Annaluxmy Nagarasa 1937 - 2019 Meesalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்பாண மாவட்டம் சாவகச்சேரி மீசாலையில் 01/FEB/1937 இல் திரு திருமதி.வேலுப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக அன்னலட்சுமி அவர்கள் தங்கம்மா, யோகம்மா, பரமேஸ்வரி, Dr.குணசிங்கம், ராசாத்தி, தவமணி, பொன்னம்பலம், லங்காதேவி, Dr.பாலசிங்கம் எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

மேலும் விளையும் பயிரை முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு இணங்க சிறு வயதில் பரந்த அறிவும் நல்ல பண்பும் கொண்டு வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான நாகராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக மதிவதனி, Dr.பவானந்தன், சந்திரவதனி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து மனோகரன், Dr.திருமகள், கிருஷ்ணராஜன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து சஞ்சுதன், சாயினி, ஹர்ஷிகா, ஹம்சிகா, மிதுனன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                

மேலும்  இவர் ஆசிரியையாக கடமையாற்றியதுடன் ஓய்வும் பெற்றார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும்,  குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன்,  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,  உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 13.06.2019 இல் 82 வயதில் பிரித்தானியாவில் உள்ள Birmingham  நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மீசாலை மண் தந்த   
......மிடுக்கானஉயிரே
பாசாங்கு செய்யாத  
.......பாச மலையே
வாழ்வாங்கு வாழ்ந்த   
....... வள்ளல் உறவே
வீழ்ந்தாரே! மண்ணில்  
.........பிரிந்தாரே! எமைவிட்டு