Born 15 SEP 1962
Died 11 AUG 2019
Mr Thambaiya Tharmanantham
Age 56
Thambaiya Tharmanantham 1962 - 2019 Puthukudiyiruppu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய இடமும் நன்கு படித்த மக்களாக விளங்குவதுடன், இறுதிப் போரின் உச்சம் பெற்ற இடமும், நெல்நிலம்,தெங்கு தோட்டம்,மரக்கறித் தோட்டம்,வீட்டுத்தோட்டம் என அழகு நிறைந்த புதுக்குடியிருப்பு  4ஆம் வட்டாரத்தில் 15/SEP/1962 இல் திரு.திருமதி சின்னர் தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.தர்மானந்தம்  அவர்கள்  இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சச்சிதானந்தம்,விவேகானந்தம், பரமானந்தம், அன்னலட்சுமி, குணலட்சுமி, மகாலட்சுமி மற்றும் யோகலட்சுமி, ஜெயலட்சுமி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கனகலிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகள் தயாநிதி  எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து மாட்டீனா, ரெல்வின் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                              

மேலும் நன்கு படித்ததுடன் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்றதுடன் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம்  கொண்டும் விளங்கினார்.  இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.08.2019 இல் 56 வயதில் சுவிஸில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

கருணை உறவே  கடவுள் உருவே
எளிமை மனமே   எங்கள் உயிரே
வதன அழகை     பார்க்க ஏங்கும்
உனது உறவுகள்   ஓவென அழுகிறது
ஒருமுறை வருவாயா  திருமுகம் காட்டுவாயா