Born 14 DEC 1929
Died 10 AUG 2019
Mr Thambiah Nagarasa
இளைப்பாறிய ஆசிரியர்
Age 89
Thambiah Nagarasa 1929 - 2019 Inuvil West Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் இணுவில் மேற்கில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பையா அவர்தம் பாரியார் செல்லமுத்து அவர்களின் அருமைப் புத்திரனாக 14/DEC/1929 ஆம் ஆண்டில் திரு.நாகராசா அவர்கள் நடராசா, சண்முகலிங்கம், சிவபுஸ்பம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                            

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர்  தன் சகோதரங்களுடன் சேர்ந்து நன்கு படித்து அனைவரும் ஆசிரியர்களானதுடன் இவர் தாவடியை சேர்ந்த திரு.திருமதி சிவசம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மகள் கமலாதேவி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கந்தராசா, யோகராஜா, இராஜரஞ்சனி, தேவராஜா, ராஜினி போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து திருமணம் முடித்து வைத்து பிரணவன், பிரனுஜன், மதுஷன், மிதுரா, சாகித்யா, மயிலோன், ஓவியா, சுருதிகா, ஆருகன், ஆதிரன், ராகவி, தானியா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் ஆசிரியத் தொழிலை நன்கு நேசித்து கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார், இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 10.08.2019 இல் 89 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கல்வியில் சிறந்த கடமை வீரனே
சொல்லினில் வண்மை தவிர்த்து
நிலையாய் உறவுடன் நின்று
மலையாய் உயர்ந்து மனிதரைப் போற்றி
சிலையாய் ஆகிய சிந்தனை உறவே
கலையாத நினைவுடன் கைகூப்பித் தொழுகிறோம்