Born 23 SEP 1946
Died 10 AUG 2019
Mr Kulanthaivelu Mahalingam முன்னாள் 5ஆம் குறுக்குத்தெரு முதலிகே பங்குதாரர் மற்றும் திருகோணமலை கனகம் மில் உரிமையாளர்
Kulanthaivelu Mahalingam 1946 - 2019 Pungudutivu 3rd Ward Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் 23/SEP/1946 இல் திரு.திருமதி குழந்தைவேல் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.மகாலிங்கம் அவர்கள்  இவ் அழகு நிறைந்த தீவில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் V.மகாலட்சுமி ,K.ராமச்சந்திரன், K.மகேந்திரன் ,B.பராசக்தி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சிவப்பிரகாசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகள் பத்மாதேவி  எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து விஜிதா, தயாநிதி, கோபிகுமார், நிஷாந்தகுமார், தீபகரன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று Dr.ஞானமோகன், கஜேந்திரன், ரம்யா, கிரிசாந்தி, அருள்மொழி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ரிஷிநாதன், ஹரினி, கவின், பிரனிதா, ஹர்ஜித், ரித்திஹாசினி, யவின்கௌதம் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                               

மேலும் திருகோணமலை,கொழும்பு என வாழ்ந்து வந்த இவர் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியும் அறிவும் நிறைந்தவராக விளங்கியதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கிய இவர் சகோதரபாசம்  கொண்டும் விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.08.2019 இல் 72 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

புங்குடுதீவின் புகழ் வீரனே
தங்க குணம் கொண்ட தோழனே
எங்கும் புகழ் வீச கல்வியில் உயர்த்தி
வங்கப் புலி போல் அழகு கொண்டு
சிங்கக் குணம் கொண்டு சிகரம் ஏற்றி
எங்கள் மனதில் தங்கினீர் தங்கமாய