மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1937
இறப்பு 28 NOV 2020
திருமதி நடராஜன் ராஜேஸ்வரி
வயது 83
நடராஜன் ராஜேஸ்வரி 1937 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மூத்த விநாயகர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராஜன் ராஜேஸ்வரி அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குழந்தைவேலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாவித்திரி(ஜேர்மனி), விஜயகுமார்(அவுஸ்திரேலியா), ரவிந்திரகுமார்(கனடா), காயத்திரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், செல்வரட்ணம், யோகரட்ணம் மற்றும் சகுந்தலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாதேவன், வசந்தா, சூரியகுமாரன் மற்றும் பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாலினி, கோகுலன், ஜனனி மற்றும் ஹர்சினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: இராஜரட்ணம், இராஜகுமாரன்

Summary

Photos

No Photos

View Similar profiles