Born 24 JUL 1934
Rest 03 OCT 2019
Mr Vellupillai Kanagarathinam (ரத்தினம்)
Age 85
Vellupillai Kanagarathinam 1934 - 2019 Saravanai East Sri Lanka

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கையில் தனது சொந்த உழைப்பால் முன்னேறியவரும், உறவுகளிடம் பாசத்தை அதிகம் பொழிபவருமான வேலுப்பிள்ளை கனகரெத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், புகையிலைத் தோட்டம், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த சரவணை கிழக்கில் 24/JUL/1934 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக கனகரெத்தினம் அவர்கள் பிறந்தார்.

சிறுவயதில் தந்தை அன்பைப் பெற்று மடிமீது தவழ்ந்த இவருக்கு காலனின் சதியால் 8 வயதில் தந்தையினை இழந்த பின்னர் அம்மாவின் அணைப்பிலும் அன்பிலும் வளர்ந்த இவர், உலகநாயகி, கமலாம்பாள், கந்தசாமி போன்ற தனது சகோதரங்களோடு குறும்புகள் செய்து வளர்ந்தார்.

குடும்ப சூழ்நிலை கருதி படிப்பை பாதியில் நிறுத்தி, புகையிலை வியாபாரத்தை செய்யத் தொடங்கிய இவர், வளர்ந்து பெரியவரானதும் நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளான விஜயலட்சுமி என்பவரை 1961 ஆம் ஆண்டு திருமணம் முடித்து, இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக சர்வா, பரன், தற்பரா,வவி தயாளன், சிவா, நிர்மலா, மாலினி, ஜெகன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று நல்ல போதனைகளை கூறி வளர்த்தார். தனது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் கயல், சிவராணி, ராசா, கார்த்திகா, சுஜி, சுகந்தி, பவா, சதீஷ், சுபா என்பவர்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் முடித்து வைத்தார்.                                      

நாட்டின் சூழல் காரணமாக பிரான்ஸிற்க்கு குடிபெயர்ந்து வாழத்தொடங்கிய இவர், தொலைக்காட்சி பார்ப்பதையும், தோட்டவேலை செய்வதையும், பேரப்பிள்ளைகளோகளோடு கொஞ்சி விளையாடுவதையும் தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.

கடைசி காலத்தில் தனது மனைவியை பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிவந்த இவர், தன்னை நல்ல முறையில் வழியனுப்ப வேண்டும் என்பதையும் முன்னரே கூறிவந்தார். வயது மூப்பின் காரணமாக தனது அன்பிற்குரிய அனைவரையும் விடுத்து 03.10.2019 இல் தனது 85 வயதில் பிரான்ஸில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.