1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 OCT 1956
இறப்பு 31 OCT 2019
அமரர் திருமதி செல்வமணி விஜயகுமரகுரு BA. (தங்கச்சி,செல்வா)
Oxonia Institute & Bishop's College - Colombo, நிதி அமைச்சு வடகிழக்கு மாகாண சபை- திருகோணமலை, Tesco & Morrisons- London
இறந்த வயது 63
அமரர் திருமதி செல்வமணி விஜயகுமரகுரு BA. 1956 - 2019 மட்டக்களப்பு இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சிரார்த்த திதி 19-10-2020 ஐப்பசி சதுர்த்தி

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பூர்வீகமாகவும், மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வமணி விஜயகுமரகுரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று போனபின்பும் அழுதவிழி ஓயவில்லை
அன்பு மனம் கொண்டவுனை அனுதினமும் நினைக்கின்றோம்
நீயிருந்த காலமெல்லாம் நிம்மதியாயிருந்தோமே
ஏனம்மா எமைப்பிரிந்தாய் ஏதிலிகளாய் ஏங்குகின்றோம்
பார்புகழ நாம் வாழ பாதைகளை வகுத்தவளே
காலமெல்லாம் நாம் வாழ கனவுகளைச் சுமந்தவளே
இயலாது என்ற போதும் அயராது உழைத்தவளே
வேரறுந்த விழுதுகள் நாம் விம்முவது கேட்கிறதா
தூரநோக்கு சிந்தனையால் துளிர்விட்டு வளர்த்தவளே
துணிவோடு முடிவெடுத்து தூணாக நின்றவளே- இன்று
துணையின்றித்தவிக்கின்றோம்..
யார் கண்தான் பட்டதுவோ காலனவன் கவர்ந்து கொண்டான்
உன் கனவெல்லாம் நனவாக்கி நின் காலடியில் சமர்ப்பிப்போம்

உங்கள் ஆத்மா வீடுபேறடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்

கணவர், பிள்ளைகள், மருமகன், பேரன் மற்றும் குடும்பத்தினர்   


தகவல்: விஜயகுமரகுரு(கணவர்)

தொடர்புகளுக்கு

விஜயகுமரகுரு - கணவர்

Photos

View Similar profiles

  • Muttucumaru Baladasan Trincomalee, London - United Kingdom View Profile
  • Gnanamuthu Jeyakumar Batticaloa, Catford - United Kingdom View Profile
  • Mohan Sivarajaratnam Ilavalai, London - United Kingdom View Profile
  • Ramalingam Sachithanantham Batticaloa, Jaffna, Vavuniya, Vavunikkulam View Profile