நன்றி நவிலல்
திருமதி ஜெகதீஸ்வரி ஜெயராஜா பிறப்பு : 11 SEP 1971 - இறப்பு : 13 DEC 2020 (வயது 49)
பிறந்த இடம்  துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம் Scarborough - Canada
ஜெகதீஸ்வரி ஜெயராஜா 1971 - 2020  துன்னாலை தெற்கு இலங்கை
நன்றி நவிலல்

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு, துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி ஜெயராஜா அவர்களின் நன்றி நவிலல்.

ஜெயாவின் மரணச்சேதி அறிந்து நேரடியாகவும்,தொலைபேசி மூலமும், எழுத்துப் பதிவு மூலமும் தொடர்புகொண்டு அவரின் பிரிவுத்துயரில் பங்குபற்றிய அத்தனை பேருக்கும்எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

காற்றோடு கரைந்த ஜெயாவுக்கு எம் கண்ணீர் அஞ்சலி

உன் பிரிவை ஏற்க மனம் மறுக்கிறது - இது
வெறும் கனவாயிருக்காதோவென்று உள்ளமெல்லாம் தவிக்கிறது
கண்ணீரோ ஆறாகப் பாய்கிறது - நீ எம்
கண்முன்னே நிற்பதாய்த் தான் தெரிகிறது
இன்ப துன்பம் பகிர இனி நீயில்லை
ஓடிவந்து பார்ப்பதற்கும் வழியுமில்லை
பதறிச் சிதறி அழுவதையும் தொழுவதையும் விட
பார் மீது இனி நாமென்ன செய்யட்டும்?

எப்போதும் சிரிப்புத் தவழும் உன் பூமுகமெங்கே?
ஓயாத உன் பேச்சொலிதான் எங்கே எங்கே?
பாசத்தோடு பழகிவந்த நாட்களெங்கே?
பதறி எமைத் தவிக்கவிட்டுப் போனதெங்கே?
சொல்லாமல் கொள்ளாமல் போனதெங்கே?
சொந்த பந்தம் எல்லாம் விட்டுப் பறந்ததெங்கே?
நிலையில்லா வாழ்வென்று நீங்கினையோ?
நினைவில் எமை மூழ்க வைத்துப் போயினையோ?

பாதி வாழ்வைக் கடக்குமுன்னே
மீதி வாழ்வை பார்க்குமுன்னே
ஆசைகள் அனைத்தும் அடையுமுன்னே
தேவைகள் எல்லாம் தீர்க்குமுன்னே
கனவுகள் யாவும் நிறைவுறுமுன்னே
காலன் உன்னைப் பறித்ததேனோ
கண்ணீரில் எமைத் தவிக்க விட்டதேனோ?

கடல் தாண்டிக் கனடா வந்தாய்
கடின உழைப்பால் முன்னேறிச் சென்றாய்
முடிந்ததெல்லாம் செய்து முடித்தாய்
மூத்தவர்க்கும் சேவைகள் செய்து வந்தாய்
குடும்பத்தை எப்போதும் சுமந்து நின்றாய்
கூட்டாக வாழவைக்க முயன்று வந்தாய்
கனிவுடன் அனைவரையும் அணைத்து வாழ்ந்தாய்
கடவுளையும் துதித்து அருள் பெற்று வந்தாய்
உறவுகளையும் நண்பர்களையும் மதித்து வந்தாய்
பாசத்தை நேசத்தைப் பகிர்ந்து வந்தாய் 
இன்று - பற்றெல்லாம் உதறிவிட்டுப் பறந்துவிட்டாய்

உன் தங்கையோடுதான் ஒன்றாய் திரிவாய்
ஒற்றுமையான சகோதரங்களென்று
ஊருக்கே உணர்த்தினாய் - நீ
உயிரோடிருக்கும் வரை உனைத் தாங்கினாள்
உன் உயிர் பிரிந்தபின்பும் உன் குடும்பத்தையும்
தாங்குவாள் எனும் தளராத நம்பிக்கையோடுதான்
சொர்க்கம் சென்று எமைப் பார்த்துக்கொண்டிருப்பாயோ?

வாழ்ந்த வாழ்வு போதுமென்று நினத்தனையோ
விதியின் முடிவு இதுதானென்று ஏற்றனையோ
பிறந்த வீட்டையும் மணந்த வாழ்வையும் பிரிந்தனையோ
செல்ல மகனையும் உன் உயிர்க் கணவனையும்
கூட விட்டுப் பிரியத் துணிந்தனையோ?

கண்மூடிக் கிடக்கின்றாய்
நீள்தூக்கம் கொள்கின்றாய்
மண்ணை விட்டு விண்ணகமேகி விட்டாய்
மனிதரை விட்டுத் தெய்வத்தோடு சேர்ந்துவிட்டாய்
எம் மனதோடு என்றும் நீங்காமல் வாழ்வாய்

விண்ணில் உன்னை வரவேற்க சொர்க் வாசல் திறக்கும்
பூமரங்கள் பூத்தூவியுனை வரவேற்கும்
சாமரங்கள் வீசியுன் களை தீர்க்கும்
பூவுலகில் ஓடி ஓடி களைத்ததெல்லாம் போதும் இனி ஓய்வெடுத்துக் கொள்!
இனி நீயும் நீள் தூக்கம் கொள்!

உன் ஆத்மா சாந்தியடையட்டும்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முருகவேல் - சகோதரர்
ஜெயராணி - சகோதரி
அசோக்குமார் - மைத்துனர்
ஏகாம்பரநாதன் - கணவர்
பிரபாகரன் - மைத்துனர்
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.