மரண அறிவித்தல்
தோற்றம் 01 DEC 1945
மறைவு 13 JAN 2021
திரு சின்னத்துரை குமரவேல் (J P)
ஓய்வுபெற்ற நூலகர்- பொது நூலகம் சுன்னாகம், முன்னாள் தலைவர்- பலநோக்கு கூட்டுறவு சங்கம் சுன்னாகம், விவாக பதிவாளர்- வலிகாமம் வடக்கு, முன்னாள் பரிபாலன சபைத் தலைவர்- ஐயனார் தேவஸ்தானம் சுன்னாகம், முன்னாள் தலைவர்- யாழ். மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசம், முன்னாள் தலைவர்- யாழ் மாவட்ட விவசாய நுகர்ச்சி கூட்டுறவு சங்கங்களின் சமாசம், முன்னாள் தலைவர்- யாழ் மாவட்ட கூட்டுறவு சபை, முன்னாள் தலைவர்- வலிதெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், அறங்காவலர்- முனியப்பர் கோவில் சுன்னாகம், முன்னாள் தலைவர்- சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கம்
வயது 75
சின்னத்துரை குமரவேல் 1945 - 2021 சுன்னாகம் இலங்கை
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை குமரவேல் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசமணி தம்பதிகளின் இளைய அருமை புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி(முன்னாள் பொது முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவு சங்கம், சுன்னாகம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விதூஷனி(சிரேஷ்ட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்- மருத்துவபீட பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்), ஜெயப்பிரணவன்(உரிமையாளர்- குமரன்'ஸ் குரூப், சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஷ்குமார்(பிரதம பொறியியலாளர்- மாநகரசபை, யாழ்ப்பாணம்), பானுஷா ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்ற வெற்றிவேல் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணானந்தன்(இலங்கைநாயகம் முன்னாள் இலங்கை பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர்), தர்மாவதி மற்றும் திலகரத்தினம்(திலகர்- கனடா), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினபூபதி(கொழும்பு), காலஞ்சென்ற சிவஞானம்(சுசிதர்) மற்றும் ரஞ்சினிதேவி(கனடா) ஆகியோரின் சகலனும்,

சுகந்தி(கனடா), ஸ்ரீமதி (கனடா), துஷ்யந்தி(கனடா), ஸ்ரீகாந்த்(கனடா), சுசிந்தா (கனடா), இராவணன்(கனடா), வாசுகி, காலஞ்சென்ற நக்கீரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

தயாபரன்(நோர்வே), கிருபாகரன்(கொழும்பு), சுஜாத்தா(கொழும்பு), சாருகா(கனடா), சண்முகப்பிரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கேதுஷா, கேனிஷா(உடுவில் மகளீர் கல்லூரி- தரம் 5) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை13-01-2021 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விதூஷனி - மகள்
சுரேஷ்குமார் - மருமகன்
ஜெயப்பிரணவன் - மகன்
ஜெயப்பிரணவன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Selvarasa Aravinthan Sandilippay, Oberhausen - Germany View Profile
  • Shuganthie Mahendiran Chunnakam, Montreal - Canada View Profile
  • Kanapathipillai Sivapavan Chunnakam, Lewisham - United Kingdom View Profile
  • Arumugam Ramanathan Analaitivu 3rd Ward, Brampton - Canada View Profile