2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUL 1970
இறப்பு 17 AUG 2017
அமரர் அன்பழகன் கனகலிங்கம் (அன்பு)
உரிமையாளர்- Betterway, Queensbury
இறந்த வயது 47
அன்பழகன் கனகலிங்கம் 1970 - 2017 புங்குடுதீவு 12ம் வட்டாரம் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 25.08.2019

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்பழகன் கனகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்ப சொத்தை தொலைத்து
நாட்கள் உருண்டோடி இரண்டு வருட காலம் ஆனாலும்...
நீங்கள் எங்கள் நெஞ்சங்களில்
எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள்.
நாங்கள் எங்கு சென்றாலும்
நீங்கள் நிழலாய் பயணிக்கும்
அந்த உணர்வு தான் எங்களை
இதுவரை காலமாய் இவ்வுலகில் வைத்துள்ளது........

இந்த இரண்டு வருடமும் ஈரேழு ஜென்மம் மாதிரி
இந்த பிரிவு எங்கள் வாழ்கையில் நீங்கா வடு
அன்பான மகனாய், ஆசையான பெரிய அண்ணாவாக
பாசமான கணவராய், கொஞ்சிப்பேசும் அப்பாவாக,
ஊரே மெய்க்கும் அளவுக்கு தலைசிறந்த மனிதனாக வாழும்போது
யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றுவிட்டீர்கள்

நாங்கள் இவ்வுலகில் ஊனமாய் உலாவுகிறோம்
எங்கள் அழுகுரல் கேட்கிறதா
எப்போது நாங்கள் உங்களுடன்  வந்து சேர்வது
என்று ஒவ்வொரு வினாடியும் ஏங்குறோம்
ஒரு முறையாவது உங்கள் முகம் பார்க்க தவிக்கறோம்
உங்கள் குரல் கேட்க துடிக்குறோம்
ஒரு நிமிடம் கூட உங்களை நினைக்காத நாளே இல்லாமல்
உங்களை வந்து சேரும் வரை நடைபிணமாக வாழும் உங்கள் குடும்பம்

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Kandiah Sanmugalingam Pungudutivu 12th Ward, Sumiswald - Switzerland View Profile
  • Kanakamma Kulanthaivelu Chavakachcheri View Profile
  • Mangairkarasy Manickavasagar Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Sivakamasunthari Puvanenthiran Kokkuvil West, Nuremberg - Germany View Profile